என் பொழப்பு இது தான்!

Friday, December 4, 2009

துணுக்ஸ்!

இன்று இரவு NDTV-HINDU!? டீவியில் byte it என்ற நிகழ்ச்சியில் நண்பரும், பதிவருமான அண்ணன் வடிவேலன் அவர்களின் பேட்டி வருகிறது, அண்ணாரின் கணிபொறி மென்பொருள்களின் கூடம் என்ற வலைப்பதிவு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு அவரின் உழைப்பே காரணம், அவரை மேலும் உயர வாழ்த்துவோம்


********

வரும் இருபதாம் தேதி(20.12.09) ஞாயிற்றுகிழமை, ஈரோட்டில் மீண்டும் ஒரு மாபெரும் சந்திப்பு நடந்த உள்ளோம், சென்ற முறை நடந்த சந்திப்பில் மேடியின் திருமணம் மிக முக்கிய காரணமாக இருந்தது, பல நண்பர்களுக்கு மேடியும்டன் நேரடி அறிமுகமில்லாமல் வர தயங்கியதாக தெரிகிறது, அதனால் இம்முறை பதிவர்களோடு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கும் சேர்த்து அழைப்பு விடப்படுகிறது!, பரஸ்பர அறிமுகம், ஒருவருகொருவர் உதவியாய்யிருத்தல், ப்ளாக்கர் பற்றிய சந்தேகங்கள், சமூக உதவி, எழுதும் முன் இருக்கும் தயக்கத்தை போக்குதல் போன்றவை முக்கிய விடயங்களாக பேசப்படும்!



இந்த முறை முழு பொறுப்பையும் அண்ணன் கதிர் ஏற்றுள்ளார், அதனால் தைரியமாக வரலாம்! வரும் முன் முன்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ ஒரு முறை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்!

வால்பையன்:9994500540
ஈரோடு கதிர்:9842786026

வெளீயூர் பதிவர்களுக்கு சிறப்பு சிகப்பு கம்பள வரவேற்பு உண்டு!

*********

போன பதிவை பற்றி பேச தோழர் கும்க்கிக்கு நேற்று மதியம் அழைத்திருந்தேன், அம்மாதிரியான தலைப்புகளில் அவருக்கு ஆர்வம் அதிகம், பேசி கொண்டிருந்தபோதே சாப்பாட்டு அயிட்டங்களும், முன் வந்து விட்டது, என்ன குழம்பு என கேட்க, ரசம் என்றார் தங்கமணி, கரண்டியை உள்ளே விட்டு கலக்கும் போது அடர் மஞ்சள் வண்ணத்தில் ஆனது, என்ன ரசம் என்றேன், கொள்ளுரசம் என்றார், சரி நேரில் பாராட்டினால் முகஸ்துதி என்ற நினைத்து கொள்வார் என்று போனிலேயே கும்கியிடம் என் மனைவி வைத்த ரசம் அப்படியே சாம்பார் மாதிரி இருக்குது என்றேன், அடத்து நொடி ரசக்கரண்டி என் மண்டையில் ”நச்” என்று இடித்தது, என்னாம்மா உன்னை புகழ்ந்து தானே பேசிகிட்டு இருக்கேன் என்றேன், உண்மையை சொல், என் ரசம், சாம்பார் மாதிரி நல்லாயிருக்குன்னு சொல்றியா இல்லை நான் வைக்கிற சாம்பார், ரசம் மாதிரி இருக்குதுன்னு கிண்டல் பண்றியா என்கிறார்.

ரங்கமணிகளுக்கு விடிவுகாலமே இல்லையா! இப்படியே போனா இதுக்கு என்ன தான் முடிவு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

*********

2012

புதுசா சொல்ல ஒண்ணுமில்லை, தங்கமணியின் வற்புறுத்தலினால் போய் அமர்ந்தேன், கிராபிக்ஸ் ,கிராபிக்ஸ் மீண்டும் அதே. இமயமலை பகுதியை சீனாவாக காட்டி அரசியல் செய்ததாக சிலர் சொல்லியிருந்தனர், இயமலையின் அந்த(பின்) பக்கம் யாருக்கு சொந்தம் என்று எனக்கு தெரியவில்லை, அதுவும் நமக்கு தான் சொந்தமா!?



கடைசி கப்பல் ஆபத்தில் சிக்க காரணமாக இருப்பது நாயகன் மற்று குரூப், ஆனால் அந்த சிக்கலை அவரே தீர்த்து வைக்க, என்னவோ அழிந்து கொண்டிருக்கும் மொத்த உலகத்தையும் காப்பாற்றியது போல் ஒருவருகொருவர் முத்தம் கொடுத்து, செண்டி”மெண்டல்” தனம் எல்லா பக்கமும் தான் இருக்கு!

**********

நான் எந்த டாஸ்மாக் பாருக்கு போனாலும் வாட்டர் பாக்கெட் வாங்க மாட்டேன், என்ன ஆனாலும் வாட்டர் பாட்டில் தான், போன வாரம் தண்ணீர் கிடைக்காமல் லோக்கல் தண்ணிர் ஊற்றி சரக்கு அடுத்து தொண்டையில் கரகரப்பு, மூக்கடைப்பு, ஒரே தும்மல்!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!

*********

கவிதை மாதிரி(அடிக்க கூடாது)

நீல வடிவ
வண்ணத்தில்
குழைத்த
சதுர வண்ண
மலர்கள் முன்
உயர்ந்ததொரு
ஆறைப் போல்
படுத்து கிடந்த
அருவியின் பின்
கவிழ்ந்த கிடந்த
குவளைக்குள்
உருண்டிருந்த
பூகோளத்தின்
ஒற்றைகால்
சந்திரன்
நான்

********

டிஸ்கி:குவியல் தான், பெயர் மாற்றி!

Wednesday, December 2, 2009

முதலாளித்துவமும், கம்யூனிஷமும்!

அமெரிக்காவை கண்டுபிடித்தது அமெரிக்கோ வெஸ்புகியா அல்லது கொலம்பஸ்சா என்ற சந்தேகம் பலரை போலவே எனக்கும் இருக்கிறது, அமெரிக்கா என பெயர் வைத்து இருந்தாலும் அது அவரை பெருமை படுத்தும் வகையில் வைக்கப்பட்டது, உண்மையில் கண்டுபிடித்தது கொலம்பஸ் தான், அதனால் தான் முக்கிய நகரத்துக்கு கொலம்பியா என பெயரிடப்பட்டது என சிலர் கூறுகிறார்கள்! சரி பற்றிய ஆராய்ச்சியை பிறகு பார்ப்போம், நன்றாக வளர்ந்த அமெரிக்கா எப்படி நாசமா போச்சுனு இப்ப பார்ப்போம்!

பல அதிபர்களின் கடுமையான உழைப்பாலும், தொழில் புரட்சியாலும் அமெரிக்காவை வல்லரசாக மாற்றினார்கள், பின்னாளில் வந்தவர்கள் முதலாளிகளுக்கு சொம்பு தூக்கி அமெரிக்காவை அதலபாதாளத்துக்கு தள்ளினார்கள், சில உதாரணங்களோட ஆரம்ப்பிகிறேன்!

சில வருடங்களுக்கு முன் அரசின் கட்டுபாட்டில் இருந்த போக்குவரத்து துறையை ஒரு பிரபல மோட்டார் நிறுவனம் தன் வசமாக்க அரசை அணுகியது, பெட்டி நகர்ந்ததோ அல்லது மூளை மழுங்கிய அமைச்சர்களோ அதை தனியார்துறைக்கு தாரைவார்த்தார்கள்! கைக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம் ஒரு ரூட்டில் பத்து பேருந்து சென்றதென்றால் அதை ஐந்தாக குறைப்பது, பின் சுலப தவணையில் அவர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான காரை விற்பது, வீட்டுக்கு ஒரு கார் என்ற விளம்பரத்தின் மூலம் அவர்களது விற்பனை கனஜோராக நடந்தது, நடுத்தரவர்க்கமும் இமேஜ் கருதி கடன் வாங்கி கார் வாங்கினார்கள், சில வருடங்கள் குடும்பத்துக்கு ஒரு கார் என்ற விகிதத்தில் அமெரிக்காவில் கார் இருந்தது! பேருந்து பெயரளவே இயக்கப்பட்டது, நடுத்தரவர்க்கத்துக்கு கீழுள்ளவர்கள் மேலும் கீழ் சென்றார்கள், அவர்களை பற்றி இன்றளவும் எந்த முதலாளிகளுக்கும் அக்கறையில்லை!

மேலுள்ளது ஒரு சாம்பிள் தான், அதன் பின் தற்போது ஏற்பட்ட பெரும்சரிவுக்கு காரணம் வேறு, நுகர்வோரை மட்டுமே நம்பியிருக்கும் அமெரிக்க முதலாளிகள், அவர்களை கையில் வைத்து கொள்ள அள்ளி அள்ளி கடன் கொடுத்தார்கள், உலகிலேயே அதிக கிரிடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் அதிகம் என்ற கணக்கெடுப்பு சொன்னது, நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 90% பணம் கடனாக வங்கியே கொடுக்கும், மீதியையும் அவர்கள் வேறிடத்தில் கடனாக பெற்றனர், வெறும் கடனிலேயே வாழ்க்கையை ஓட்டிய அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிக வட்டியால் சரிந்தது, மிக அத்தியாவிசய பொருள் தவிர மற்ற பொருள்களின் விலை சரிந்தது!

மிக முக்கியமாக ரியல் எஸ்டேட், நீங்கள் ஒரு லட்சத்திற்கு வாங்கிய வீடு வெறும் ஐம்பதாயிரத்துக்கு தான் போகுமென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும், கடன் நிலுவையுள்ளவர்கள் தங்கள் வீடுகளை அப்படியே விட்டு விட்டு தங்களது நான்கு சக்கர வாகனங்களில் கிளம்பிவிட்டனர், இன்றும் பல குடும்பங்கள் வாகனங்களிலேயே திரிந்து கொண்டிருப்பதாக தகவல் உண்டு, விலை குறைந்த சொத்தை பறிமுதல் செய்தாலும் கொடுத்த பணத்திற்கு ஈடாகாது வங்கிக்கு, அதனுடன் கடனட்டை மூலம் வராக்கடன்கள் கோடிகணக்கில் ஏறியது, வங்கியில் ஆரம்பித்து ஒன்றுடன் ஒன்று தொடர்பாக அனைத்து தொழில்களும் முடங்கின!

பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர், வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்களிடம் வேலை பறிக்கப்பட்டது, நாடு திரும்ப முடியாத சிலர் தற்கொலை செய்து கொண்டனர்(வழக்கம் போல் வெளிவராது). அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த அனைத்து நாடுகளும் சற்றும் எதிர்பாராத சரிவை சமாளிக்க முடியாமல் பொருளாதார பின்னடவை கண்டது, தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடிந்த தகுதியான சில நாடுகள் மட்டும் காலூன்றி நின்றது, அமெரிக்க அரசும் பல கோடி நிதி அளித்து பல முதலாளிகளுக்கு உதவி செய்தது, ஆனாலும் நேற்று வரை அமெரிக்காவில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 124!. பலகோடிகள் பேப்பரை டாலராக மாற்றி அரசு பல நிறுவனங்களில் தம்மையும் பங்குதாரராக ஆக்கி கொணடது! (இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்ல)

****

இந்தியாவில், இந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயங்களில் தனியார் வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன! அதனாலேயே பலருடய எதிர்ப்பை அவர் சம்பாரித்தார், இன்றும் சில முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு இந்திராகாந்தியை பிடிக்காது, அதற்கு பல அரசியல் காரணங்கள் கூட சொல்வார்கள்!

தமிழகத்தில் நான் பிறப்பதற்கு டி.வி.எஸ் கையில் போக்குவரத்து இருந்ததாக சில பெருசுகள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன், இன்றும் இருந்திருந்தால் நம் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு டி.வி.எஸ் 50 யாவது கையில் இருந்திருக்கும் அதாவது வாங்க வைக்கப்பட்டிருப்போம்! இன்றும் கூட பெங்களூரில் தனியார் பேருந்துகளும் அரசுக்கு இணையாக இயங்குகின்றன!, ஒருவேளை அரசு பேருந்து இல்லையென்றால் தனியார் வைத்தது தான் சட்டம்! சில முதலாளித்துவவாதிகள் சொல்வார்கள் ஏன் ஒருவருக்கு மட்டும் கொடுக்கிறீர்கள் பலருக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று.

இந்தியாவில் இருக்கும் தனியார் கேபிள் ஆப்புரேட்டர்கள் கண்டிப்பாக தூர்தர்ஷன் சேனலை ஒளிபரப்ப வேண்டும், அவர்களும் ஒளிபரப்புவார்கள் ஆனால், சிக்னல் மிக குறைவாக உள்ள பேண்ட்வித்தில் வெளிச்ச புள்ளியாக, இரைச்சலாக இது தான் பொதிகை என்று நாமே கண்டு பிடித்து கொள்ள வேண்டியது தான்! அரசுக்கு இப்படியென்றால் தனியாருக்கு எப்படியிருக்கும் இருட்டடிப்பு!?, எத்தனை பேருக்கு கொடுத்தாலும் வலியவன் ஒருவன் அனைவரையும் கவுட்டுக்குள் அமுக்கி வைத்து மேலேறி உட்கார்ந்து கொள்வான், நுகர்வோர் தேவைகளை மறந்து தருவதை பெறும் நிலைக்கு தள்ளப்படுவோம்!

***

மேட்டர் என்னான்னா!. கம்யூனிஷம் என்பது தனி மனித கொள்கையாக இல்லாமல் ஒரு நாடு தன் கொள்கையாக வைத்திருந்தது, அது சக வல்லரசான ரஷ்யா , இன்று அதுவும் பல துறைகளை தனியாருக்கு வழங்கி கொண்டிருக்கிறது! ஒரு நாடு முழுக்க முழுக்க கம்யூனிஷ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், தனியாருக்கும் வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அரசின் கட்டுபாடு இருக்க வேண்டும், இல்லையென்றால் இங்கேயிருந்து எடுத்து நமக்கே இயற்கை எரிவாயுயை விற்க முயன்ற ரிலையன்ஸ் முதலைகள் போன்ற பல தோன்றி நம்மை மீண்டும் ஒரு காலணிய அடிமைதனத்திற்கு கொண்டு செல்லும்!

Monday, November 30, 2009

உண்மையிலேயே மாபெரும் சந்திப்பு தான்!

நண்பர் லவ்டேல் மேடியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது!, பல பணிகளுக்கு மத்தியிலும் நண்பர்கள் வெகு தூரத்தில் இருந்து வந்து விழாவை சிறப்பித்தனர், முதல் நாள் இரவிலிருந்தே நண்பர்கள் வரத்துவங்க நானும், பாஸ் கார்த்திக்கும் அவர்களை வரவேற்று அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம்.

முதலில் ஈரோடு வந்து சேர்ந்தது எழுத்தாளார் வாமு.கோமுவும், தோழர் பெரியசாமியும்(அவரே தான்), தோழர்கள் இருவரும் எங்களுக்காக பாரதி பதிப்பகத்தில் காத்து கொண்டிருந்தனர், லாதானந்த் சாரும் ரயிலில் வந்து கொண்டிருந்ததால் மொத்தமாக அழைத்து வர கார்த்திக், காரில் சென்று விட்டார், நான் நேராக அறைக்கு செல்ல அனைவரும் அங்கு வந்து விட்டனர்!, பின் ஒவ்வோருவராக வந்த வண்ணம் இரவு கழிந்தது!

சுவையான உரையாடலுடன் முதல் ஆட்டம் தொடங்கியது, திருப்பூர் நண்பர்கள் நேரடியாக மண்டபத்துக்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து அப்படியே செல்ல இருப்பதாகவும் போன் வந்தது, ஆட்டத்தை பாதியில் நிறுத்தி ஐந்து பேர் கொண்ட குழு முதலில் மண்டபம் கிளம்பியது, அந்த குழுவில் தான் லதானந்த் இருந்தார், சென்றவர்கள் வெகு நேரமாக திரும்பாததாலும், திருப்பூர் நண்பர்களிடமிருந்து போன் வந்து கொண்டேயிருந்ததாலும் இருந்த மூன்று இருசக்கர வாகனத்தில் மீதமிருந்த ஆறு பேர் கிளம்பினோன்!

நாங்கள் செல்லும் வழியிலேயே, ஐந்து பேர் கொண்ட குழு திரும்பி வந்து கொண்டிருப்பதாக போன் வந்துவிட்டது, வழியிலேயே சந்தித்தோம், சில,பல விசயங்கள் நடந்தது எங்களுக்கு அப்போது தெரியாது, லதானந்த் அவர்களின் பதிவை படித்தே நான் தெரிந்து கொண்டேன்!,

இவ்விடத்தில் இதை நான் சொல்லியே ஆகவேண்டும், பெரும்பாலான நண்பர்கள் ”பூஸ்ட்” குடிக்க உட்கார்ந்துட்டா வயசு வித்தியாசம் பார்க்காமல் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்னு நினைச்சிகிட்டு இருக்காங்க, அது தப்புன்னு நான் நினைக்கிறேன்!, நான் டோண்டு சார், தருமி சார் கூட அமர்ந்து கூட பூஸ்ட் சாப்பிட்டிருக்கேன், யாரும் இதுவரை முகம் சுழித்து சென்றதில்லை, நாம் ப்ளாக்கர் என்ற ஒரே விசயத்தில் மட்டும் ஒன்றுபடுகிறோமே தவிர ஒவ்வோருவருக்கும் ஒரு தொழில், வித்தியாசமான குணாதிசியங்கள் உண்டு! அதற்குறிய மரியாதையை தர வேண்டியது நம் கடமை, மீறும் பட்சத்தில் நீங்கள் நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்படலாம்.(சில பேர், என்னை ஒதுக்குவது போல)


இரவு விடிய விடிய நானும் மாநக்கல் சிபியும் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தோம், விடியற்காலை சித்தர் சுரேஷிடம் நடந்த வாழ்க்கையும், சீட்டு விளையாட்டு என்ற கட்டுரையும். ஆவியும், ஆசைகளும் என்ற கட்டுரையும் தனியே!, இரவு அறையில் தங்கியிருந்தவர்கள் அப்படியே மண்டபத்துக்கு செல்ல, பகலில் வரத்துவங்கியிருந்த நண்பர்கள் ஒவ்வொருவராக மண்டபம் வரத்தொடங்கியிருந்தனர், வர முடியாத நண்பர்கள் அலைபேசியில் அழைத்து மேடிக்கு வாழ்த்து சொல்லி கொண்டிருந்தனர், குசும்பன் மட்டும் என் போனுக்கு அழைத்து வாழ்த்து சொன்னார்!

இரண்டு மணி நேர அரட்டைக்கு பின் ஒவ்வொருவராக கிளம்பினோம்! மிக இனிதாக அமைந்த அந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த அடுத்த நண்பரின் திருமணத்திற்காக வெயிட்டிங்! கார்த்திகை பாண்டியன், ஸ்ரீதர் பெயர் அடிபடுகிறது, சிவகாசி அன்பு கூட வெகு தீவிரமாக கண்ணில் படும் பெண்களை லவ்வி கொண்டிருக்கிறாராம், குஜராத்தில் இருக்கும் டக்ளஸ் நமிதாவின் உறவுமுறை பெண் எதாவது கிடைக்குமா என்று தேடி கொண்டிருக்கிறார், எப்படியும் நமக்கு விரைவில் திருமண சாப்பாடு உண்டு!

வந்திருந்தவர்கள்!

லதானந்த்
வாமு.கோமு. - தோழர் பெரியசாமி
நாமக்கல் சிபி
கும்க்கி
தியாகு
இளையகவி
வழக்கறிஞர் ராஜசேகரன்
கதிர்-ஈரோடு
பாலாஜி
கோவை சுரேஷ்
சிவாஜி
பெர்ணாண்டஸ் - அவரது சகோதரர்
கார்த்திகைப்பாண்டியன்
ஸ்ரீதர்
அகல்விளக்கு ஜெய்சிங்
ரம்யா - கலை அக்கா - சித்தர் சுரேஷ் - மணி
எ(ஏ)ழுத்தோசை தமிழரசி
ரங்கா
செல்வேந்திரன்
ராஜன் ராதாமணாளன்
கனவுகளின் முகவரி ரீனா
ஊர்சுற்றி ஜோன்சன்
பட்டிகாட்டான் அவரது நண்பர் வசந்த்
திருப்பூர் நண்பர்கள்:
பரிசல்காரன்
வெயிலான்
ஈரவெங்காயம்

யார் பெயராவது விட்டு போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!

******

ஊர்சுற்றி அவர்கள் தொடுத்துள்ள புகைப்பட ஆல்பம்!

******

வேறு யாராவது இச்சந்திப்பை பற்றி பதிவெழுதியிருந்தால் பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கவும்!

Tuesday, November 24, 2009

குவியல்!..(24.11.09)

வரும் வெள்ளிக்கிழமை(27.11.09)நண்பரும் பதிவருமான லவ்டேல் மேடியின் திருமணம் ஈரோட்டில் நடக்க இருப்பது யாவரும் அறிந்ததே!, நண்பரும் தனக்கு தெரிந்த வரை அனைவருக்கும் இ-மெயிலிலும், அலைபேசியிலிலும் அழைப்பு விடுத்திருந்தார், அழைப்பு கிடைக்காத நண்பர்களும் கலந்து கொள்ளலாம், தயவுசெய்து நண்பர்களுக்குள் சங்கோஜம் இல்லாமல் கலந்து கொள்ளவும், மேடி, வரும் நண்பர்களை தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார், வரும் நண்பர்கள் உங்களது வருகையை உறுதி செய்தால் எவ்வித தடங்கலும் இல்லாமல் சிறப்பான கவனிப்பிற்கு வழிவகுக்கும்!

எனது மின்னஞ்சலுக்கோ, அலைபேசிக்கோ அழைத்து வருகையை உறுதி செய்து கொள்ளவும், ப்ளீஸ்!

****

கடைசியாக அல்லது ஒரு வழியாக நானும் ட்வீட்டரில் இணைத்து விட்டேன், ஆர்வ கோளாரில் அதை எனது அலைபேசிக்கு லிங்க் கொடுக்க இரவெல்லாம் ”டொய்ங்” ”டொய்ங்” என்று அடித்து இல்லாளின் கோபத்தை சமாளிக்க வேண்டியிருந்தது, எனது அலைபேசியில் GPRS அருமையாக வேலை செய்கிறது, எனது வலைப்பூவை அதன் மூலமே பார்க்க முடிகிறது, அதிலிருந்தே ஒரு பின்னூட்டம் கூட போட்டேன்! இனி அடுத்து மூன்றாம் தலைமுறை அலைவரிசையில் என்னவெல்லாம் நடக்கும் என ஆர்வம் பொங்க உங்களை போலவே காத்திருக்கிறேன்!

****

pulp fiction

இதனை தனி பதிவாக இடும் எண்ணத்தில் இருந்தேன்! பல்பு வாங்க வைத்த ”பல்ப் பிக்‌ஷன்” என்ற பெயரில் பதிவெழுதி ஒரு எண்ணிக்கையை கூட்டும் எண்ணம் ஹாலிவுட் பாலா போன்ற ஜாம்பாவான்களை பார்க்கும் போது என்னை விட்டு அகன்று விட்டது! இந்த படத்தின் இயக்குனர் திரைக்கதையில் பல புதுமைகளை புகுத்தியவர் என அனைவரும் அறிந்ததே! ஆனால் நான் பார்த்த இவரது முதல் படம் kill bill, ஆக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதையில் அவர் செய்த மேஜிக் வேலைகள் எனக்கு தெரியவில்லை, சண்டை காட்சிகளில் அதீத வன்முறைக்கு பதில் அனிமேஷன் காட்சிகளை புகுத்தியது பின்னாளில் ஆளவந்தானில் பயன்படுத்தப்பட்டது!

இந்த படத்தை பொறுத்தவரை இது ஒரு non liner படம் என்று பின்நவீன பார்ட்டிகள் சொல்கிறார்கள், பத்து பக்க கதையை கலைத்து போட்டு வரிசையாக இல்லாமல் இஷ்டத்துக்கு படிப்பது திரைக்கதையில் ஒரு புதுமை, ஆனாலும் சேப்டர்(அத்தியாயம்) வாரியாக கதை தொடர்போடு இருப்பதால் அதிகம் மண்டை காயவில்லை, புருஸ் வில்லிசின் சேப்டரில் ஜான் ட்ரோவோல்டா சாக, மீண்டும் அடுத்த சேப்டரில் வருவது, புதிதாக இம்மாதிரியான படம் பார்ப்பவர்களுக்கு குழப்பலாம்!, கடைசி சேப்டரில் சாமுவேல் ஜான்ஷனுக்கு ஃப்ரெண்டாக வருபவர் தான் இந்த படத்தின் இயக்குனர், பெரும்பாலும் இவரது படங்களில் ஒரு காட்சியிலாவது நடித்து விடுவது இவரது வழக்கம்.



படத்தின் ஆரம்பம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மெதுவாக தான் இருந்தது!, போக போக சீட்டின் நுனிக்கு வருவது உங்கள் சீட்டின் அளவைப் பொறுத்தது, சரி இது தான் கதை போல என்று நிமிர்ந்து அமர்ந்தால் அடுத்த சேப்டரில் புருஷ் வில்லீஸ், இவ்விடத்தில் சொல்ல வேண்டிய முக்கிய காட்சி, வில்லீஸின் கனவில் வரும் சிறுவயது காட்சி, ஒரே ஒரு காட்சிக்கு வந்தாலும் கிரிஸ்டோபர் வால்கின்னின் நீண்ட பேச்சு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பது ஹாலிவுட் நடிகர்களின் திறமைக்கு ஒரு அத்தாட்சி, இப்படத்தில் பல காட்சிகள் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டவை தான்!,

இந்த சேப்டரில் ட்ரவோல்டா இறந்தவுடன் அது முடிந்தவிடும் என்று நினைத்தால் அதன் பிறகு தான் விசயமே ஆரம்பம், புருஷும் அவரது முன்னாள் ஓனரும் இரண்டு சைக்கோக்களிடம் மாட்டும் போது, ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியின் உச்சிக்கே போவோம், எனக்கு பிடித்த சேப்டராக கடைசி சேப்படரை தான் சொல்வேன், இயக்குனருக்கு நடிகர்களை தேர்தெடுப்பதில் மிக சிறந்த சுவை, கடைசி சேப்டரில் சாமுவேல் ஜாக்‌ஷனின் வசனமும், அதை சொல்லும் அழகும், holy smoke புகழ் ”ஹார்வி கீத்தலின்” அசால்டான நடிப்பும் மிக அருமை, ஒருவேளை நான் தியேட்டரில் பார்த்திருந்தால், ட்ரவோல்டாவின் கடைசி காட்சிக்கு மட்டும் எழுந்து நின்று கை தட்டியிருப்பேன், அந்த ரெஸ்டாரண்டில் இருந்து வெளியே போகும் காட்சிக்காக மறுபடி ஒருமுறை பார்க்கலாம்!

****

புதிர்!

venom, poison இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன!?

!

Blog Widget by LinkWithin